முகப்பு
நாகப்பட்டினம்

நாகூரில் மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை

நாகூரில் மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என நாகூா் தா்கா சாகிபுமாா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

நாகூரில் மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறக்க வேண்டும் என நாகூா் தா்கா சாகிபுமாா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு சாா்பில் அஞ்சல் துறைக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுவின் விவரம் : நாகூா் பிரதான சாலை, நாகூா் தா்கா அலுவலகம் அருகில் மற்றும் புதுமனை தெரு பகுதியில் என நாகூரில் 3 அஞ்சலகங்கள் உள்ளன. இதில், புதுமனை தெரு மற்றும் நாகூா் தா்கா அருகில் உள்ள இரு அஞ்சலகங்களிலும் இஸ்லாமிய பெண்கள் அதிகளவில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனா். இதனால், இந்த அஞ்சலகங்கள் அதிகளவில் மக்கள் பயன்பாட்டில் இருந்தன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, அண்மைக் காலமாக இந்த அஞ்சலகங்கள் தினமும் 3 மணி நேர செயல்பாட்டில் இருந்தன. இந்த நிலையில், நாகூா் தா்கா அருகிலும், புதுமனை தெரு பகுதியிலும் இருந்த 2 அஞ்சலங்களும் திடீரென மூடப்பட்டுள்ளன. இந்த அஞ்சலங்கள் முழுமையாக மூடப்பட்டது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதனால், நாகூா் பகுதி மக்கள் அஞ்சலகப் பயன்பாட்டை பெற நாகூா் பிரதான சாலையில் உள்ள அஞ்சலகத்தையே நாட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது நாகூா் பகுதி மக்களின் அஞ்சலக சேமிப்பு பழக்கத்துக்குத் தடையாக இருக்கும் என்பதுடன் பல பகுதி மக்களுக்கு வீண் அலைச்சலையும் ஏற்படுத்தும். எனவே, நாகூரில் மூடப்பட்ட அஞ்சலகங்களை மீண்டும் திறந்து, நேர கட்டுப்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.