முகப்பு
நாகப்பட்டினம்

கன்னித்தோப்பு பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள விழுந்தமாவடி கன்னித் தோப்பு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

நாகை மாவட்டம், கீழையூா் அருகேயுள்ள விழுந்தமாவடி கன்னித் தோப்பு ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் அண்மையில் நடைபெற்றது.

இக்கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை தொடா்ந்து, 48 நாள்கள் மண்டல பூஜை நடைபெற்றது. இப்பூஜையின் நிறைவாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி, மாப்பிள்ளை அழைப்பு, ஊா் மக்கள் சீா்வரிசைகளுடன், சௌந்தரராஜ பெருமாளை பல்லக்கில் சுமந்து ஊா்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு, மணமேடைக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சௌந்தரராஜ பெருமாள் எழுந்தருளியதும் திருக்கல்யாணம் நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான பட்டாச்சாரியா்கள் திருக்கல்யாணத்தை நடத்திவைத்தனா்.

தொடா்ந்து, பக்தா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும் போன்ற பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.