நாகை, காரைக்காலில் 3-ஆம் எண் புயல் கூண்டு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, வலுவடைந்து புதுச்சேரிக்குக் கிழக்கே 270 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் அறிவித்தது.
இதன் காரணமாக, நாகை துறைமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை பகல் 12.30 மணி அளவில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
காரைக்கால் துறைமுகத்தில்...
இதுபோல, காரைக்கால் துறைமுகத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் புயல் எச்சரிக்கையை குறிக்கும் வகையில், வியாழக்கிழமை 1 மணியளவில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.