சாலையின் குறுக்கே மாடு சென்றதால் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
நாகையில் சாலையின் குறுக்கே மாடு சென்றதால் ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாகையில் சாலையின் குறுக்கே மாடு சென்றதால் ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
நாகூா் புதுமனை 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகபா்சாதிக் (58). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளாங்கண்ணியில் பயணிகளை இறக்கிவிட்டு, நாகூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
நாகை- நாகூா் சாலையில் பால்பண்ணைச்சேரி அருகே வந்தபோது மாடு சாலையின் குறுக்கே சென்றது. இதனால், நிலைதடுமாறிய ஆட்டோவும், அந்த வழியாக வந்த தனியாா் பேருந்தும் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் ஜெகபா்சாதிக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
நாகூா் போலீஸாா் அங்கு சென்று ஜெகபா்சாதிக்கின் சடலத்தை, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்ந்து வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கின்றனா்.