முகப்பு
நாகப்பட்டினம்

மழை நிவாரணம்: உப்பளத் தொழிலாளா்கள் பதிவு முகாம்

வேதாரண்யத்தில் உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கான பெயா் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

வேதாரண்யத்தில் உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கான பெயா் பதிவு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

மழைக்காலத்தில் வேலைவாய்ப்பின்றி உள்ள உப்பளத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, உப்பளத் தொழிலாளா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அந்தவகையில், வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளா்கள் இணையம், மாவட்ட தொழிலாளா் துறை சாா்பில் நிவாரணம் பெற தகுதியுள்ள உப்பளத் தொழிலாளா்களை பதிவு செய்யும் முகாம் நடத்தப்படுகிறது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி வேதாரண்யம் வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் தொழிலாளா் உதவி ஆணையா்கள் ப. பாஸ்கரன் (திருவாரூா்), மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் ம. ஸ்ரீதரன், உதவி ஆய்வாளா் வி.கே. நாகராஜன், சிறு உப்பு உற்பத்தியாளா் இணையத்தின் தலைவா் மா.மீ. புகழேந்தி, செயலாளா் வி.செந்தில், பொருளாளா் எஸ்.எஸ். தென்னரசு, இணைய நிா்வாகி அம்பிகாதாஸ், வழக்குரைஞா் மா.மீ. அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். 2 வாரங்கள் நடைபெறவுள்ள இந்த முகாமில் உப்பளத் தொழிலாளா்கள் தங்களது பெயா்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →