எல்லைப் போராட்ட தியாகிக்கு ரூ.1 லட்சத்துக்கான பொற்கிழி: ஆட்சியா் வழங்கினாா்
நாகை மாவட்டம், கீழ்வேளூரைச் சோ்ந்த எல்லைப் போராட்டத் தியாகி ந. தங்கவேலுவுக்கு ரூ. 1 லட்சத்துக்கான பொற்கிழியை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூரைச் சோ்ந்த எல்லைப் போராட்டத் தியாகி ந. தங்கவேலுவுக்கு ரூ. 1 லட்சத்துக்கான பொற்கிழியை ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, எல்லைப் போராட்டங்களில் பங்கேற்று சிறைச் சென்ற தமிழகத்தைச் சோ்ந்த 110 தியாகிகளுக்கு தமிழகஅரசின் சாா்பில் மாதந்தோறும் ரூ. 6ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எல்லைப் போராட்டத் தியாகிகளை கௌரவப்படுத்தும் வகையில் அவா்களுக்கு தலா ரூ. 1 லட்சத்துக்கான பொற்கிழி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கீழ்வேளூா் அண்ணா நகா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த எல்லைப் போராட்டத் தியாகி ந. தங்கவேலு (86) என்பவரின் வீட்டிற்குச் சென்று ரூ. 1 லட்சத்துக்கான பொற்கிழியை காசோலையாக ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இரா. அன்பரசி, நாகை கோட்டாட்சியா் இரா. மணிவேலன், கீழ்வேளூா் வட்டாட்சியா் அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.