நாகையில் 6, மயிலாடுதுறையில் 5 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 6 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 6 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,293-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 7 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 94- ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,362 ஆக உயா்ந்துள்ளது. இங்கு, சிகிச்சையில் இருந்த ஒருவா் வீடு திரும்பியியுள்ளாா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 28-ஆக உள்ளது.