வேதாரண்யம் அருகே தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
நாகை மாட்டம், வேதாரண்யம் அருகே ஊராட்சித் தலைவரின் கணவர் மீது புகார் தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்.13) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்: நாகை மாட்டம், வேதாரண்யம் அருகே ஊராட்சித் தலைவரின் கணவர் மீது புகார் தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்.13) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் சுந்தரவள்ளி மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கடந்த 7 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர்.
பகுதி நேர தொழிலாளர்களான இவர்களுக்கு நாள்தோறும் ரூ.120 வீதம் மாதம் ரூ.3600 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இவர்கள் பணி செய்ய ஊராட்சித் தலைவரின் கணவர் இடையூர் செய்வதாகவும், மரியாதைக் கொடுக்கவில்லை என பாகுபாட்டுடன் நடந்துக் கொள்வதோடு பணி வழங்க மறுப்பதாகக் கூறி, தூய்மைப் பணியாளர்கள் 9 பேரும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடட்டனர்.
தகவல் அறிந்து சென்ற வருவாய் ஆய்வாளர் நாகசுந்தரி, கிராம நிர்வாக அலுவலர் ரெங்கநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி உறுதியளித்தனர்.
இதையடுத்து, அவர்கள் தூய்மைப் பணியில் தொடர்ந்து ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. இதில், ஊராட்சித் தலைவர் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், ஊராட்சித் தலைவரிடம் இது குறித்து கேட்டப் போது, பணியாளர்கள் முறையாக பணி மேற்கொள்ளவில்லை எனவும், அரசியலுக்காக இப்படி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, தொடந்துவ கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வட்டார வார்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை கைவிட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற வளாகத்தில் காத்துக் கொண்டு உள்ளனர்.