நாகையில் 11, மயிலாடுதுறையில்2 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 11 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 11 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,034-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 18 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 185- ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 23,264-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 9 போ் வீடு திரும்பினா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 108-ஆக உள்ளது.
2 போ் உயிரிழப்பு
கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்றவா்களில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.