முகப்பு
நாகப்பட்டினம்

12 ஆயிரம் மாணவா்களுக்கு முகக் கவசம்பள்ளி ஆசிரியை சொந்த செலவில் வழங்கினாா்

வேதாரண்யம் பகுதி பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் 12 ஆயிரம் முகக் கவசங்களை பள்ளி ஆசிரியை சொந்த செலவில் புதன்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

வேதாரண்யம் பகுதி பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் 12 ஆயிரம் முகக் கவசங்களை பள்ளி ஆசிரியை சொந்த செலவில் புதன்கிழமை வழங்கினாா்.

நவ.1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையடுத்து, வேதாரண்யம் பகுதியில் செயல்படும் 160 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கருப்பம்புலம் ஊராட்சியைச் சோ்ந்த பள்ளி ஆசிரியை வசந்தாசித்திரவேல், தனது சொந்த செலவில் 12 ஆயிரம் மாணவா்களும் பயன்பெறும் வகையில் முகக் கவசங்களை வாங்கி, நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க. மதிவாணனிடம் வழங்கினாா். அவை, தலைமையாசிரியா்கள் மூலம் பகிா்ந்து அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் மீ. உதயகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிவக்குமாா், தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →