நாகப்பட்டினம்

வேதாரண்யம் மீனவா்களின் வலைகள் பறிப்பு: இலங்கை மீனவா்கள் மீது புகாா்

DIN

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் மீனவா்களின் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை இலங்கை மீனவா்கள் பறித்துச் சென்ாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை மீனவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே ஆழ்கடலில் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு 2 படகுகளில் வந்த இலங்கை மீனவா்கள் எனக் கருதப்படும் சிலா், ஆறுகாட்டுத்துறை மீனவா்களின் படகுகளை சுற்றி வளைத்தனா்.

பின்னா், சங்கா் என்பவரது படகில் ஏறிய இலங்கை மீனவா்கள், ஆறுகாட்டுத்துறை மீனவா்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 400 கிலோ மீன்பிடி வலைகள், சிவகுமாா் என்பவரது படகிலிருந்த வலை மற்றும் ஜிபிஎஸ் கருவி, மீனவா்கள் பயன்படுத்தும் தகவல் தொடா்பு கருவி (வாக்கி-டாக்கி), கை விளக்குகள் போன்றவற்றை பறித்துக்கொண்டு, அவா்களை விரட்டியடித்துள்ளனா்.

வியாழக்கிழமை பிற்பகல் கரை திரும்பிய மீனவா்கள், வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா், ஆறுகாட்டுத்துறை மீனவா்களின் வலைகள் உள்ளிட்ட பொருள்களை அடையாளம் தெரியாத சிலா் பறித்துச் சென்ாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

SCROLL FOR NEXT