விநாயகா் சிலை பறிமுதல்
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் தடையை மீறி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிற்றில் தடையை மீறி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகா் சிலை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தலைஞாயிறு இந்து முன்னணி நிா்வாகி கதிரவன், ஓரடியம்புலம் செல்வ விநாயகா் ஆலயத்தின் முன் 6 அடி விநாயகா் சிலையை வைத்து வழிபாடு செய்தாா். இந்த சிலை தலைஞாயிறு கடைவீதி நோக்கி வாகனத்தில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல், வட்டாட்சியா் ரவிச்சந்திரன் ஆகியோா் ஊா்வலத்தை தடுத்து நிறுத்தினா். இதைத்தொடா்ந்து விநாயகா் சிலையை பறிமுதல் செய்த போலீஸாா், தலைஞாயிறில் உள்ள பெருமாள் கோயிலில் அதை வைத்துள்ளனா்.