நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
நாகப்பட்டினம்: நாகை துறைமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
மத்தியகிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளதையடுத்து, புயல் தூர முன்னெச்சரிக்கை அறிவிப்பாக நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.