நாகப்பட்டினம்

நாகை மாவட்ட நூலகத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

நாகை மாவட்ட நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை மாவட்ட நூலகத்தின் புத்தகப் பராமரிப்பு முறை, புத்தகங்கள் இருப்பு ஆகியன குறித்து கேட்டறிந்த ஆட்சியா், நூலகத்துக்குத் தேவைப்படும் புத்தகங்களை வாங்கி வைக்குமாறு நூலக அலுவலரிடம் அறிவுறுத்தினாா். பின்னா், காடம்பாடி பொதுப் பணியாளா் கூட்டுறவு பண்டகச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவா், விநியோகத்துக்கு வைக்கப்பட்டிருந்த அரிசி மற்றும் இதர பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, இருப்பு விவரங்களைக் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, பாலையூா் ஊராட்சி ஒன்றியத் தொடங்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT