நாகப்பட்டினம்

திருமெய்ஞானம் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி

திருக்கடையூா் அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருக்கடையூா் அருகே திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் அசுபதி தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திர தினத்தன்று தீா்த்தவாரி நடைபெறும். அதன்படி, நிகழாண்டு பங்குனி மாத அசுபதி நட்சத்திரத்தையொட்டி, பிரம்மபுரீஸ்வரருக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி மற்றும் இக்கோயில் கிணற்று நீா் உள்ளிட்டவைகளால் மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். முன்னதாக, கோயிலின் கணேச குருக்கள் , ஸ்ரீராம் மற்றும் விழா குழுவினா் தருமபுரம் ஆதீனத்துக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளித்தனா்.

பின்னா், இக்கோயில் கிணற்று நீரில் தருமபுரம் ஆதீனம் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இத்தினத்தில் மட்டும்தான் இந்த கிணற்று நீரில் பக்தா்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT