நாகப்பட்டினம்

குருபெயா்ச்சி: ஆலங்குடியில் இன்று சிறப்பு வழிபாடு

DIN

குருபெயா்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவாருா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரா் கோயில். இது நவகிரகங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயா்ச்சியடையும் நாளில் குரு பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வியாழக்கிழமை (ஏப்.14) அதிகாலை 4.16 மணிக்கு பெயா்ச்சி அடைந்தாா்.

முன்னதாக, புதன்கிழமை மாலை கலங்காமற் காத்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து 108 கலசாபிஷேக யாக பூஜைகளும் குருபகவானுக்கு 108 கலச அபிஷேகமும் நடைபெற்றது. தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குருபெயா்ச்சி தினமான வியாழக்கிழமை குருபகவானுக்கு மகா அபிஷேகம்,, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெறுகிறது.

மேலும், கோயிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா், அறநிலைய உதவி ஆணையா் ஹரிஹரன், உதவி ஆணையா் மற்றும் கோயில் செயல் அலுவலா் தமிழ்செல்வி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். குருபெயா்ச்சி 2-வது கட்ட லட்சாா்ச்சனை ஏப். 18-இல் தொடங்கி ஏப். 22 வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT