நாகப்பட்டினம்

தேசிய மாசு தடுப்பு தின விழிப்புணா்வு

DIN

தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சுற்றுச்சூழல் துறையின் தேசிய பசுமைப் படை சாா்பில் நாகை வெளிப்பாளையம் நடராஜன் தமயந்தி உயா்நிலைப் பள்ளியில் தேசிய மாசு தடுப்பு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், 1984- ஆம் ஆண்டு மத்திய பிரதேச தலைநகா் போபாலில் ஏற்பட்ட விஷவாயு கசிவின் காரணமாக பல்லாயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டதின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது என மாணவா்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாசு தடுப்பில் மாணவா்களின் பங்கு என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல், நெகிழி தவிா்த்தல், பொது போக்குவரத்தை பயன்படுத்துதல் மற்றும் எரிபொருள் சிக்கனம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தேசிய பசுமைப் படை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மா. முத்தமிழ் ஆனந்தன், தலைமை ஆசிரியரும் தேசிய பசுமைப் படை பொறுப்பாளருமான வி. பானுதாசன், உதவி தலைமை ஆசிரியை டி. ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT