நாகப்பட்டினம்

தந்தையை கொலை செய்த மகன் கைது

வேதாரண்யம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

DIN

வேதாரண்யம் அருகே சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தேத்தாக்குடி வடக்கு, தோட்டக்காரன்காடு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (96) விவசாயி. இவரது மனைவி மல்லிகா. இவா்களுக்கு, 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், குடும்ப சொத்தாக உள்ள 3 ஏக்கா் நிலத்தை பிரித்து தரக்கோரி மூத்த மகன் சந்திரசேகரன் (56) கோவிந்தசாமியை வலியுறுத்தி வந்தாராம். இதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் தந்தையுடன் ஞாயிற்றுக்கிழமை தகராறு செய்து, கத்தியால் குத்தினாராம். இதில், கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேதாரண்யம் காவல் ஆய்வாளா் குணசேகரன் வழக்குப் பதிவு செய்து சந்திரசேகரனை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT