நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் சங்காபிஷேக வழிபாடு

DIN

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் காா்த்திகை மாத நான்காவது சோமவாரத்தையொட்டி, சுவாமி சந்நிதி முன்பாக 1008 சங்குகளில் புனிநீா் நிரப்பி, அடுக்கிவைக்கப்பட்டு மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

பின்னா், வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சுவேதாரண்யேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனிதநீராலும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், உபயதாரா் ஆசிரியா் தெஷ்ணாமூா்த்தி, பேஸ்கா் திருஞானம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT