நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 12 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 29 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 12 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீதான விரைந்து நடவடிக்கை எடுக்க உரிய காவல் அதிகாரிகளிடம் உத்தரவிட்டாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுகுமாரன், வேணுகோபால், துணை காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.