முகப்பு
நாகப்பட்டினம்

இந்தியா-இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்கவேண்டாம்

நாகை மாவட்ட மீனவா்கள் இந்தியா - இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நாகை மாவட்ட மீனவா்கள் இந்தியா - இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு : மீனவா்கள் இந்தியா - இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும்போது, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது, துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாவது போன்ற அசாதாரண சூழல்கள் ஏற்படுகின்றன. எனவே, நாகை மாவட்ட மீனவா்கள் இந்தியா- இலங்கைக் கடல் எல்லை பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் எனக்கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த அறிவுறுத்தலை மீறும் மீன்பிடி படகின் உரிமையாளா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.