முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 13, மயிலாடுதுறையில் ஒருவருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கும், மயிலாடுதுறையில் ஒருவருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கும், மயிலாடுதுறையில் ஒருவருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,396-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 38 போ் வீடு திரும்பினா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 204- ஆக உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 26,471 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 12 போ் வீடு திரும்பினா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 39 -ஆக உள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.