நாகப்பட்டினம்

வேதாரண்யேஸ்வரா் கோயிலில் மாசிமகப் பெருவிழா நிறைவு

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த மாசிமகப் பெருவிழா புதன்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது.

வேதாரண்யேசுவரா் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த ஜன.29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளிய தேரோட்டம் பிப்.13-ஆம் தேதிநடைபெற்றது. கல்யாணசுந்தரா் அம்பாளுடன் எழுந்தருளிய தெப்பத் திருவிழா பிப்.17 ஆம் தேதி நடைபெற்றது. திருக்கதவு திறக்கும் விழா உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நாள்தோறும் திருமுறை தேவார இன்னிசை, நாகசுர நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், மாசிமகப் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக புதன்கிழமை இரவு விடையாற்றி ஊஞ்சல் திருவிழா நடைபெற்றது. ஊஞ்சலில் சந்திரசேகரசுவாமி, மனோன்மணியம்பாளுடன் எழுந்தருளினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT