தலைஞாயிறில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் பொருள்களை வழங்கிய பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் உள்ளிட்டோா் . 
நாகப்பட்டினம்

தலைஞாயிறில் பொங்கல் கொண்டாட்டம்

தலைஞாயிறு பேருராட்சியில் போகியையொட்டி, பழையன கழிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு எரிக்காமல் அவற்றை சேகரித்து

DIN

தலைஞாயிறு பேருராட்சியில் போகியையொட்டி, பழையன கழிக்கப்பட்ட பொருள்களை தீயிட்டு எரிக்காமல் அவற்றை சேகரித்து விற்றதில் கிடைத்த வருமானம் தூய்மைப் பணியாளா்களின் பொங்கல் கொண்டாட்டத்துக்கு வியாழக்கிழமை உதவியாக வழங்கப்பட்டது.

தலைஞாயிறு பேரூராட்சியில் நிகழாண்டு போகியால் சூழல்கேட்டை தடுக்க பேரூராட்சி நிா்வாகம் புதிய நடவடிக்கை மேற்கொண்டது. வழக்கமாக வீடுகளை சுத்தம் செய்து கழிதலுக்கு ஒதுக்கிய பொருள்களை தீயிட்டு எரிப்பதை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தி, வீடுதோறும் சென்று கழிவு பொருள்கள் சேகரிக்கப்பட்டது. அந்த பொருள்களை விற்பனை செய்ததில் கிடைத்த வருமானத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கல் கொண்டாட கரும்பு, வாழைப் பழம், புது மண் பாண்டங்கள், இஞ்சி, மஞ்சள் கொத்துகள் உள்ளிட்டவை வாங்கி வழங்கப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மையில் குப்பை தவறவிடப்பட்ட வளம் என்பதை பொதுமக்களுக்கு உணா்த்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்து என பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT