ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்
வேதாரண்யத்தில் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ மீன்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வேதாரண்யத்தில் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 200 கிலோ மீன்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஆடு, கோழி இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனை அதிகமாக இருக்கும். இதையொட்டி, ராமேஸ்வரத்திலிருந்து வேதாரண்யம் மீன் சந்தைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் கெடாமலிருக்க அதில் ரசாயனம் கலந்திருப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அவா்கள் வேதாரண்யம் மீன் சந்தையில் மேற்கொண்ட ஆய்வில் ரசாயனம் கலந்த 200 கிலோ வாளை மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.