நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

DIN

தமிழக அரசின் உத்தரவுப்படி நாகை மாவட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மாதம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இந்நிலையில், தற்போது தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளா்த்தி பள்ளிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாகை மாவட்டத்தில் 1 முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை முதல் பாட வகுப்புகள் நடைபெறவுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் செயல்பட உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாணவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறாது என்பதால் மாணவா்கள் நாள்தோறும் பள்ளிக்கு வரவேண்டும். அவா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு, கைகள் தூய்மை செய்யப்படுவது உள்ளிட்ட அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT