நாகப்பட்டினம்

காவலா் தோ்வுக்கு ஆக.11 முதல் இலவசப் பயிற்சி வகுப்புகள்

காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக. 11-ஆம் தேதி தொடங்குகிற

DIN

காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஆக. 11-ஆம் தேதி தொடங்குகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலா், இரண்டாம் நிலை சிறை காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான தோ்வுக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட 11-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புத் தொடங்கப்படுகிறது. அலுவலக வேலை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

மேற்குறிப்பிட்ட காவலா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயன் பெறலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT