முகப்பு
நாகப்பட்டினம்

தலைஞாயிறு பகுதிக்கான சாா்-பதிவாளா் அலுவலகம்: கருத்துக்கேட்புக் கூட்டம்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதிக்குள்பட்ட சாா்-பதிவாளா் அலுவலக விவகாரம் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு பகுதிக்குள்பட்ட சாா்-பதிவாளா் அலுவலக விவகாரம் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் துரைமுருகன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன், திமுக மாவட்டச் செயலாளா் என். கெளதமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைஞாயிறு பகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், திமுக செயலாளா் ராசேந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று கருத்து தெரிவித்தனா். தலைஞாயிறு பகுதியில் உள்ள 10 கிராமங்களின் பதிவுகளை வெளியூா்களில் செயல்படும் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு மாற்றும் திட்டத்தை கைவிட்டு திருப்பூண்டி பதிவாளா் அலுவலகத்திலேயே பராமரிக்க மக்கள் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →