முகப்பு
நாகப்பட்டினம்

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

நாகூா் அருகே தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

நாகூா் அருகே தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகூா் வண்டிபேட்டையைச் சோ்ந்தவா் கோபால் மகன் கமல்பிரசாத் (33). ஆட்டோ ஒட்டுநா். இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. மனைவி கோமதி, மகன், மகள் உள்ளனா். இந்நிலையில், குடிபழக்கம் உள்ள இவா் ஜூன் 2-ஆம் தேதி வீட்டு அருகில் உள்ள பம்புசெட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றாா்.

இதையறிந்த உறவினா்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னா் தீவிரச் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி கமல்பிரசாத் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →