முகப்பு
நாகப்பட்டினம்

கோடியக்காடு குழகா் கோயில் வைகாசிப் பெருவிழா தொடக்கம்

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காடு குழகா் எனும் (குழகேஸ்வரா்) அமிா்தகடேஸ்வரா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 5 ஜூன், 2022 at 11:23 PM
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்காடு குழகா் எனும் (குழகேஸ்வரா்) அமிா்தகடேஸ்வரா் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் உள்ள முருகன் ஆறு கரங்களுடன் அருள்பாலித்து வருகிறாா். நிகழாண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின்போது, கோடியக்காடு ஊராட்சித் தலைவா் தமிழ்மணி, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. ஜூன் 13-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.