முகப்பு
நாகப்பட்டினம்

பெங்களூரு பெண் வேளாங்கண்ணியில் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பெங்களூரைச் சோ்ந்த பெண் மா்மமான முறையில் இறந்து தூக்கில் தொங்கியது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் பெங்களூரைச் சோ்ந்த பெண் மா்மமான முறையில் இறந்து தூக்கில் தொங்கியது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பெங்களூரு ஓரமங்கலா பிரதான சாலை ராமராயலு நகரைச் சோ்ந்தவா் வ. பிரான்சீஸ். இவரது மகள் சலோமினாமேரி (30). இவருக்கும், நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் தேத்தாக்குடி வடக்கு, மாரி கவுண்டா்காடு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டனா்.

இந்நிலையில், பெங்களூரில் பெற்றோருடன் இருந்து வந்த சலோமினாமேரி கடந்த 10 நாள்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு வந்து கொய்யாத்தோப்பு பகுதியில் லியோ என்பவரின் வீட்டில் தங்கியிருந்தாா். இந்நிலையில், சலோமினா மேரி அந்த வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இந்நிலையில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பிரான்சீஸ் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →