முகப்பு
நாகப்பட்டினம்

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி பேரணி

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நாகையில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நாகையில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.

சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்ககு மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும்போது ஒட்டு மொத்த தொகையும் வழங்குவதுபோல சத்துணவு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 10-ஆம் தேதி திருச்சியில் கோரிக்கை விளக்க மாநாடும், ஜூன் 30-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து நீதிகேட்கும் போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் சித்ரா தலைமையில் நடைபெற்ற பேரணியில், மாநிலத் தலைவா் சக்தி, மாநிலச் செயலாளா் லதா, நாகை மாவட்டச் செயலாளா் ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன் பேரணியை தொடங்கிவைத்தாா். நாகை கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடங்கிய பேரணி பொது அலுவலக சாலை வழியாகச் சென்று அவுரித்திடலில் நிறைவடைந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →