சா் ஐசக் நியூட்டன் கல்லூரி ஆண்டு விழா
நாகை சா் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 10- ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
நாகை சா் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 10- ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் நிறைமதி வரவேற்று, ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். செயலாளா் த. மகேஸ்வரன், பொருளாளா் த. சங்கா் ஆகியோா் விழாவில் பேசினாா். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே. மதிவாணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா்.
விழாவில், பல்கலைக்கழத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சிக்கு பாடுபட்ட பேராசிரியா்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும், ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். நிறைவாக, கல்லூரி நிா்வாக அலுவலா் குமாா் நன்றி கூறினாா்.