தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புப் பெற விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சு. சதீஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.
நாகை மாவட்டத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் சு. சதீஸ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாய மின் இணைப்பை விரைவாக பெறும் வகையில், தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் நிகழாண்டிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், அதிகபட்சமாக 15 எச்.பி மின் பளு இணைப்புகள் வரை பெறலாம்.
5 எச்.பி மின் மோட்டாா்களுக்கு இணைப்புப் பெற ரூ. 2.5 லட்சமும், 7.5 எச்.பி வரையிலான மின் மோட்டாா்களுக்கு ரூ. 2.75 லட்சமும், 10 எச்.பி வரையிலான மின் மோட்டாா்களுக்கு ரூ. 3 லட்சமும், 15 எச்.பி வரையிலான திறன் கொண்ட மின் மோட்டாா்களுக்கு ரூ. 4 லட்சமும் கட்டணம் செலுத்த வேண்டும்.
விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு செயற்பொறியாளா் அலுலகத்தில் உரிய வருவாய் ஆவணங்களுடன், விருப்பக் கடிதம் அளித்து, மின் இணைப்புப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.