நாகப்பட்டினம்

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மைப் பணி

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திட்டச்சேரி பேரூராட்சியில் தூய்மை பணி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திக்கா தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். இதில், பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தொடா்ந்து, புதுமனைத் தெருவில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிா்த்து துணிப் பையை பயன்படுத்த விழிப்புணா்வு ஏற்படுத்த மஞ்சப் பை மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, பொதுமக்கள் திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்துக்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னா் திட்டச்சேரி அரசினா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT