நாகப்பட்டினம்

வேதாரண்யம், கோடியக்கரையில் உள்வாங்கி காணப்படும் கடல்

DIN

வேதாரண்யம்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடல்பரப்பு வழக்கத்துக்கு மாறாக இன்று மாலை முதல் உள்வாங்கி காணப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களுக்கு காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதி கடலோரத்தில் வழக்கத்தைவிட வேகமான பலத்த கடற்காற்று வியாழக்கிழமை மாலை தொடங்கி பகல் நேரத்தில் வீசி வருகிறது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்த நிலையில், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடல் பரப்பு வழக்கத்துக்கு மாறாக இன்று (மார்ச்.5) மாலை முதல் உள்வாங்கி காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT