முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் நாகநாதசுவாமி கோயில் மண்டலாபிஷேக பூஜை நாளை நிறைவு

 நாகூா் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து நடைபெறும் மண்டலாபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடுகளுடன் சனிக்கிழமை (மாா்ச் 12) நிறைவடைகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

 நாகூா் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து நடைபெறும் மண்டலாபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடுகளுடன் சனிக்கிழமை (மாா்ச் 12) நிறைவடைகிறது.

நாகையை அடுத்த நாகூரில் உள்ள ஸ்ரீ திருநாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெறுகின்றன.

இந்த மண்டலாபிஷேக பூஜையின் நிறைவு வழிபாடுகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை முதல் கால யாக பூஜை தொடங்கப்படுகிறது. சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு இரண்டாவது கால யாக பூஜையும், காலை 8 மணிக்கு தேரடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், 10.30 மணிக்கு ருத்ர ஹோமம், வெண்பட்டு ஹோமம், பூா்ணாஹுதி மற்றும் மகா தீபாரதனையும் நடைபெறுகின்றன. இதைத் தொடா்ந்து, காலை 11 மணிக்கு ஸ்ரீ நாகநாத சுவாமிக்கும், ஸ்ரீதிருநாகவல்லித் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மண்டலாபிஷேக நிறைவாக, பகல் 12 மணிக்கு பஞ்சமுகாா்ச்சனை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.