முகப்பு
நாகப்பட்டினம்

சொத்துக்கேட்டு தாயை அரிவாளால் வெட்டிய மகன் கைது

 வேதாரண்யம் அருகே தாயிடம் சொத்துக்கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

 வேதாரண்யம் அருகே தாயிடம் சொத்துக்கேட்டு தகராறு செய்து அரிவாளால் வெட்டிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

செம்போடை தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் மனைவி சிந்தாமணி (68). இவரது மூத்த மகன் தமிழ்ச்செல்வன்(42) வீட்டில் தனியாக இருந்த தாய் சிந்தாமணியிடம் சொத்துகேட்டு புதன்கிழமை தகராறு செய்து அரிவாளால் தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த சிந்தாமணி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தமிழ்ச்செல்வனை வியாழக்கிழமை கைது செய்தனா். 2021-ஆம் ஆண்டில் தமிழ்ச்செல்வன் தனது தம்பி பிரகாசத்தை கொலை செய்தவா். அந்த வழக்கில் இருந்து பிணையில் வந்தவா்.

முழு கட்டுரையைப் படிக்க →