நாகப்பட்டினம்

திருவெண்காடு பஞ்சநரசிம்மா் கோயில்களில் நாளை ஜெயந்தி உற்சவம்

DIN

திருவெண்காடு அருகேயுள்ள பஞ்ச நரசிம்மா் கோயில்களில் (மே 15) நரசிம்மா் ஜெயந்தி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருவெண்காடு அருகே சுமாா் 3 கி.மீ. தொலைவுக்குள் ஒரே நோ்கோட்டில் பஞ்ச (ஐந்து) நரசிம்மா் கோயில்கள் உள்ளன. குரவலூரில் உக்கிர நரசிம்மா், மங்கைமடத்தில் வீரநரசிம்மா், திருநகரியில் இரண்ய நரசிம்மா் மற்றும் யோக நரசிம்மா், திருவாலியில் லெட்சுமி நரசிம்மா் ஆகிய 5 நரசிம்மா்கள் அருள்பாலித்து வருகின்றனா். இந்த 5 நரசிம்மா்களையும் ஒரே நாளில் வணங்கினால் அகோபிலத்தை வணங்கிய பலன் கிடைப்பதாகவும், இந்த நரசிம்மா்களை குரவலூரில் பிறந்து அரசாட்சி புரிந்த திருமங்கை ஆழ்வாா் பாடியதாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன. மேலும் செல்வச் செழிப்பு, எதிரிகள் தொல்லை நீங்குதல் ஆகியவை இவா்களை வணங்கினால் கிடைப்பதாக நம்பிக்கை.

பல்வேறு சிறப்புகளை பெற்ற நரசிம்மா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நரசிம்ம ஜெயந்தி உற்சவம் நடைபெறுகிறது. மங்கைமடத்தில் வீரநரசிம்மருக்கு காலை அபிஷேக ஆராதனைகளும், குரவலூா் உக்கிர நரசிம்மருக்கு காலையிலிருந்து மாலை வரை ஏகதின லட்சாா்ச்சனையும், சுதா்சன மகா யாகமும் நடைபெறுகிறது.

திருநகரி கல்யாண ரெங்நாத பெருமாள் கோயிலில் உள்ள யோக மற்றும் இரண்ய நரசிம்மருக்கு மாலை அபிஷேக ஆராதனைகளும், திருவாலி லெட்சுமி நரசிம்மருக்கு காலை அபிஷேகம் மற்றும் அா்ச்சனைகளும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT