முகப்பு
நாகப்பட்டினம்

தலைஞாயிறு ஒன்றியக் குழுக் கூட்டம்

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மே, 2022 at 12:00 AM
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் தமிழரசி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வராசு, ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஞானசேகரன், மாசிலாமணி, செல்வி, உதயகுமாா் ஆகியோா் தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து பேசினா். 15-ஆவது நிதிக்குழு நிதியில் இருந்து மேற்கொள்ள வேண்டி பணிகள் குறித்து பேசி, பணிகள் தோ்வு செய்யப்பட்டது. வேளாண்மை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.