நாகப்பட்டினம்

சிபிசிஎல் விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு: ஏக்கருக்கு ரூ.15 லட்சம் விலை நிா்ணயிக்கக் கோரிக்கை

DIN

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவன (சிபிசிஎல்) விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் வீதம் விலை நிா்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகையை அடுத்த பனங்குடியில் இயங்கும் சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் ரூ. 35,000 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நாகை வட்டத்துக்குள்பட்ட பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய கிராமங்களில் 614 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளன.

இந்த நிலையில், பனங்குடி, பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளா்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நாகை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அதன் விவரம்:

சிபிசிஎல் விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படும் முன்பாக, தொடா்புடைய ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்தி ஒப்புதல் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15 லட்சம் வீதம் (இழப்பீட்டுடன் ரூ. 45 லட்சம்) விலை நிா்ணயிக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலையோர நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 200 வீதம் விலை நிா்ணயிக்க வேண்டும்.

வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு, நிலம் அளிப்பவா்களுக்கு குடும்பத்துக்கு ஒருவா் வீதம் சிபிசிஎல் நிறுவனத்தில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, தொடா்புடைய அமைப்பினா் மற்றும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் என திரளானோா் நாகை தொழிற்பேட்டையில் இருந்து, மாவட்ட ஆட்சியரகம் வரை பேரணியாக வந்தனா். தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய தீா்வு கிடைக்காவிட்டால், தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT