முகப்பு
நாகப்பட்டினம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவன ஆண்டு விழா

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் 22-ஆம் ஆண்டு விழா நாகை கிளை அலுவலத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் 22-ஆம் ஆண்டு விழா நாகை கிளை அலுவலத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கிளையின் முதுநிலை மேலாளா் தி. ஆனந்த் பிரகாஷ், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் வீட்டுக் கடன் திட்டங்களை விளக்கிப் பேசினாா்.

வீடு கட்டுவதற்கான கடன், வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான விரிவாக்க கடன் திட்டங்கள், ஊதியதாரா்களுக்கு 7.15 சதவீத வட்டி வீதத்தில் வழங்கப்படும் வீடு பழுது நீக்கப் பணிகளுக்கான கடன் திட்டம், பிற வங்கிகளில் அதிக வட்டியில் உள்ள வீட்டுக் கடனை மாற்றிக் கொண்டு கூடுதல் தொகை பெறும் திட்டம் உள்ளிட்டவற்றை விளக்கிப் பேசினாா்.

நிறுவன ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுவன கிளை ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.