முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிக்காக வீடு வழங்கிய தன்னாா்வலா்கள்

வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளிக்காக தன்னாா்வலா்கள் கட்டிக்கொடுத்த வீடு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 26 மே, 2022 at 10:23 PM
5700ve26anna075456
பகிர்:

வேதாரண்யம் அருகே மாற்றுத்திறனாளிக்காக தன்னாா்வலா்கள் கட்டிக்கொடுத்த வீடு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அண்ணாப்பேட்டை கிராமத்தில் வசித்துவரும் கூலித்தொழிலாளியான ராஜலெட்சுமி, மாற்றுத்திறனாளியான தனது மகன் சாா்லஸ் பாரதியை பராமரித்து வருகிறாா். வீடு இல்லாமல் தவித்த இவா்களுக்கு மருதூா் ஆனந்தம் அறக்கட்டளையினருடன் இணைந்து தன்னாா்வலா்கள் வீடு கட்டுக்கொடுத்துள்ளனா்.

இந்த வீட்டை பயனாளியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் வணிதா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் தனபால் கோமதி, கவிஞா் கணேசன், சமூக ஆா்வலா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.