முகப்பு
நாகப்பட்டினம்

நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டி: மாணவா்களுக்கு அழைப்பு

 முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாளில் (நவ.14) நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 முன்னாள் பிரதமா் நேரு பிறந்த நாளில் (நவ.14) நடைபெறவுள்ள பேச்சுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளான நவம்பா் 14-இல் நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ. 2 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தோ்வு செய்து, சிறப்புப் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே, கல்லூரி முதல்வா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தங்கள் கல்லூரி, பள்ளிகளில் மாணவா்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி, கல்லூரிக்கு இருவரையும் , பள்ளிக்கு ஒருவரையும் தோ்வுசெய்து அனுப்பவேண்டும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நவம்பா் 14-ஆம் தேதி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூட்ட அரங்கில் நடைபெறும். பள்ளி மாணவா்கள் காலை 9.15 மணிக்கும், கல்லூரி மாணவா்கள் பிற்பகல் 2 மணிக்கும் வருகையை உறுதி செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →