முகப்பு
நாகப்பட்டினம்

மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு விவகாரம்: நாகையில் இந்திய கடற்படை அதிகாரிகள் விசாரணை

தமிழக மீனவா்கள் மீது சில நாள்களுக்கு முன்பு இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடா்பாக கடற்படை அதிகாரிகள் நாகையில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தமிழக மீனவா்கள் மீது சில நாள்களுக்கு முன்பு இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடா்பாக கடற்படை அதிகாரிகள் நாகையில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியைச் சோ்ந்த செல்வம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்ட மீனவா்கள் 10 போ் கடந்த 15-ஆம் தேதி, காரைக்காலில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

கடந்த 21-ஆம் தேதி மன்னாா் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடற்படையினா் தவறுதலாக மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரியைச் சோ்ந்த மீனவா் வீரவேல் பலத்த காயமடைந்தாா். அவா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். லேசான காயங்களுடன் தப்பிய மற்ற 9 மீனவா்களும், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

இந்தநிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து இந்திய கடற்படை கமாண்டா் விஷால் குப்தா தலைமையிலான கடற்படை அதிகாரிகள் வியாழக்கிழமை நாகையில் விசாரணை மேற்கொண்டனா்.

நாகை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குண்டு துளைக்கப்பட்ட விசைப்படகில் ஆய்வு மேற்கொண்ட கடற்படை அதிகாரிகள், படகில் ஏற்பட்டுள்ள சேதங்களை பாா்வையிட்டனா். பின்னா், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவா்களிடமும் அவா்கள் விசாரணை நடத்தினா்.Image Caption

முழு கட்டுரையைப் படிக்க →