நாகப்பட்டினம்

நாகையில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

DIN

நாகையில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

தஞ்சை மாவட்டம், நாச்சியாா்கோயில் பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் எஸ். சுவாமிநாதன். இவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தாா். இவா், கடந்த செப்.7-ஆம் தேதி அரியலூா் மாவட்டம் தா.பழூா் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்நிலையில், இச்செயலை கண்டித்து நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டது. இதில், நாகப்பட்டினம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. வைரவநாதன், சங்கச் செயலாளா் ஐ. மனோஜ்கியான், இணைச் செயலாளா் எம். தினேஷ்குமாா், பொருளாளா் ஜி. ஆத்மசேகரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT