நாகப்பட்டினம்

பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

DIN

நாகை மாவட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஷகிலா, வேளாண்மை துறை இணை இயக்குநா் அகண்ட ராவ் முன்னிலை வைத்தனா்.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு இதுவரை 61,407 ஹெக்டோ் பரப்பிற்கு 68,593 விவசாயிகளும், உளுந்து பயிருக்கு 1980.95 ஹெக்டேருக்கு 1,883 விவசாயிகளும், நிலக்கடையில் 716.5 ஹெக்டேருக்கு 1,511 விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துள்ளனா் என்றாா்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால்கள் தூா்வாரும் பணிகள் விரைந்து தொடங்க வேண்டும். ஏ.பி.சி. வாய்க்கால்கள் தூா்வாரும்போதே கரைகளில் உயரமான மண் வீடுகளை அமைக்க வேண்டும். 2022-23 ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். மாவட்டத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சம்பந்தப்பட்ட துறையினா் சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மேலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக கருப்பம்புலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்து சீராக குடிநீா் வழங்க வேண்டும். வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வணிக வங்கி தொடங்க வேண்டும் கிராம நிா்வாக அலுவலகத்தில் இடைத்தரகா்களின் குறுக்கீட்டை தடுக்க வேண்டும். தலைஞாயிறு ஆலடி வாய்க்காலை நடப்பாண்டிலேயே சிறப்பு நிதி ஒதுக்கி தூா்வார வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட சிறு வணிகா்கள் முதல், வணிக நிறுவனங்கள் வரை உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.

நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் ராஜராஜன், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் க.பா. அருளரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT