திருக்குவளை அருகேயுள்ள ஆய்மூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பள்ளி படிப்புக்கு பின்னா் மாணவா்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் ஏ. செங்குட்டுவன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பள்ளி மேலாண்மை குழு தலைவா் விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Image Caption
மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.