நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும், கருவேலங்கடை, திருக்கண்ணபுரம், வங்காரமாவடி, வெட்டியக்காடு ஆகிய ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியா் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ரூ. 7500 தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படும். விண்ணப்பிக்க விரும்புவோா் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஜன.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.