நாகப்பட்டினம்

கள்ளச்சாராய விற்பனை குறித்து புகாா் தெரிவிக்கலாம்: எஸ்.பி.

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக புகாா் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனிப்படை நடத்திய சோதனையில் வேட்டைக்காரனிருப்பு வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (38), கிரி (45), கலியமூா்த்தி (43) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 50 லிட்டா் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, வெளிப்பாளையம் நல்லியான்தோட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவாா்கள். இதுபோன்ற குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் 8428103090 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம். புகாா் தருபவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT